Thursday, July 15, 2010

சின்ன பூவே மெல்லப் பேசு - chinna poove mella pesu

சின்ன பூவே மெல்லப் பேசு
உந்தல் 
காதல் சொல்லிப் பாடு
சின்ன பூ விழி பார்ததும்
பூவினம் நாணுது
காலடி ஓசையில் காவியம் தோணுது

சின்ன பூவே மெல்ல பேசு
உந்தன் காதல் சொல்லிப் பாடு

பாவையின் தேன் குழல் மேகமோ - பொன்
வானத்தில் வரைந்திடும் கோலமோ
கண்கள் நீரினில் நீந்திடும் மீன்களோ 
எந்தன் காதலை மை எனப்  பூசவோ
சின்ன பாதங்கள் தாங்கிடும்
பொன்னெழில் மேனியை அள்ளவோ
கொஞ்சம் கிள்ளவோ
சின்ன பூவே மெல்ல பேசு

உந்தன் காதல் சொல்லிப் பாடு

வாலிப சோலையின் வாசமே
எந்தன் வாசலில் ஆடிடும் நேசமே 
ஆனந்த சங்கம சந்தமே
எந்தன் ஆசையில் விளைந்திடும் சொந்தமே
இன்ப தென்றலின் பாதைகள்
எங்கிலும் ஆசைகள் பொங்குதே
என்னை கெஞ்சுதே

சின்ன பூவே மெல்ல பேசு
உந்தன் காதல் சொல்லிப் பாடு

யமுனை ஆற்றிலே ஈர காற்றிலே , yamunai aatrile





யமுனை ஆற்றிலே ஈர காற்றிலே
கண்ணனோடுதான் ஆட..
பார்வை பூத்திட பாதை பார்த்திட
பாவை ராதையோ வாட
(யமுனை..)

இரவும் போனது பகலும் போனது
மன்னன் இல்லையே கூட..
இளைய கன்னியின் இமைத்திடாத கண்
அங்கும் இங்கும் தேட...
(இரவும்..)

ஆயர்பாடியில் கண்ணன் இல்லையோ
ஆசைவைப்பதே அன்பு தெல்லையோ...
(ஆயர்பாடியில்..)

யமுனை ஆற்றிலே ஈர காற்றிலே
கண்ணனோடுதான் ஆட..
பார்வை பூத்திட பாதை பார்த்திட
பாவை ராதையோ வாட...

Wednesday, July 14, 2010

ராஜ ராஜ சோழன் நான் - raja raja cholan

ராஜ ராஜ சோழன் நான்
எனை ஆளும் காதல் தேசம் நீ தான்
பூவே காதல் தீவே
மண் மீது சொர்க்கம் வந்து பெண்ணாக ஆனதே
உல்லாச பூமி இங்கு உண்டானதே

ராஜ ராஜ சோழன் நான்..


கண்ணோடு கண்கள் ஏற்றும் கற்பூர தீபமே
கை தீண்டும் போது பாயும் மின்சாரமே
உல்லாச மேடை மேலே ஓரங்க நாடகம்
இன்பங்கள் பாடம் சொல்லும் என் தாயகம்
இங்கங்கு ஊஞ்சலாக நான் போகிறேன்
அங்கங்கு ஆசை தீயில் நான் வேகிறேன்
உன் ராக மோகனம் என் காதல் வாகனம்
செந்தாமரை செந்தேன் மழை
என் ஆவி நீயே தேவி

ராஜ ராஜ சோழன் நான்..


கல்லூர பார்க்கும் பார்வை உள்ளூர பாயுமே
துள்ளாமல் துள்ளம் உள்ளம் சல்லாபமே
வில்லோடு அம்பு ரெண்டு கொள்ளாமல் கொல்லுதே
பெண் பாவை கண்கள் இன்று பொய் சொல்லுதே

முந்தானை மூடும் ராணி செல்வாகிலே
என் காதல் கண்கள் போகும் பல்லாக்கிலே
தேனோடை ஓரமே நீராடும் நேரமே
புல்லாங்குழல் தல்லாடுமே
பொன்மானே கேளாய் ராணி

ராஜ ராஜ சோழன் நான்..

Monday, July 12, 2010

சாதி மல்லி பூச்சரமே - jaathi malli poocharame

சாதி மல்லி பூச்சரமே , சங்கத்தமிழ் பாச்சரமே ,
ஆசையென்ன ஆசையடி , அவ்வளவு ஆசையடி ,
என்னென்ன முன்னே வந்து கண்ணே நீ கொஞ்சம் கேட்டுக்கோ ...

காதலில் உண்டாகும் சுகம் இப்போது மறப்போம் ,
கன்னித் தமிழ் தொண்டாற்று , அதை முன்னேற்று ,
பின்பு கட்டிலில் தாலாட்டு ..

எனது வாழ்வு எனது வீடு என்று வாழ்வது வாழ்க்கையா ?
இருக்கும் நாலு சுவருக்குள்ளே வாழ நீ ஒரு கைதியா ?
யாதும் ஊரென யாரு சொன்னது கண்மணி ,
பாடும் நம்தமிழ் பட்டன் சொன்னது பொன்மணி ..
படிக்கத்தான் பாடமா நெனச்சு பாத்தோமா ?
பிடிச்சத நெனச்சு நாம் நடக்க தான் ..
கேட்டுக்கோ ராசாத்தி தமிழ் நாடாச்சு இந்த நாட்டுக்கு நாமாச்சு ..

உலகம் யாவும் உண்ணும்போது 
நாமும் சாப்பிட எண்ணுவோம் ..
உலகம் யாவும் சிரிக்கும்போது 
நாமும் புன்னகை சிந்துவோம் ...
தாயும் வேறல்ல நாடும் வேறல்ல ஒன்று தான் ,
தாயைக்காப்பதும் நாட்டைக்காப்பதும் ஒன்று தான் 
கடுகு போல் உன்மனம் இருக்ககூடாது ,
கடலைப்போல் விரிந்ததாய் இருக்கட்டும் ...

கேட்டுக்கோ ராசாத்தி தமிழ் நாடாச்சு இந்த நாட்டுக்கு நாமாச்சு ....

Film: azhagan, அழகன் 
Cast: mammootty , banupriya
Music: Maragatha Mani
Singer: SPB